உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்ட வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சோயிப் மாலிக், உலகக்கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறும் வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை விட்டு வெளியேறியது.

அத்துடன் அந்த அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், உலகக்கோப்பை தொடருடன் தங்கள் கடைசி ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய முக்கியமான வீரர்கள் குறித்து, கிரிக்கெட் நிபுணர் பரத் சீர்வி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1983 உலகக் கோப்பை

 • லில்லி (அவுஸ்திரேலியா)
 • டர்னர் (நியூசிலாந்து)

1987 உலகக் கோப்பை

 • கவாஸ்கர், பின்னி (இந்தியா)
 • டையஸ், டி மெல் (இலங்கை)

1992 உலகக் கோப்பை

 • மார்ஷ், டெய்லர், ரெயிட் (அவுஸ்திரேலியா)
 • ஸ்ரீகாந்த் (இந்தியா)
 • ஐயன் ஸ்மித் (நியூசிலாந்து)
 • இம்ரான் கான் (பாகிஸ்தான்)
 • மால்கம் மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்)

1996 உலகக் கோப்பை

 • மெக்டர்மாட் (அவுஸ்திரேலியா)
 • ராபின் ஸ்மித் (இங்கிலாந்து)
 • பிரபாகர் (இந்தியா)
 • மியாண்டட் (பாகிஸ்தான்)
 • ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்)

1999 உலகக் கோப்பை

 • ஃபேர்பிரதர் (இங்கிலாந்து)
 • லார்சன் (நியூசிலாந்து)
 • சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
 • ரணதுங்கா, மஹானாமா (இலங்கை)
 • பில் சிமன்ஸ், ஆதுர்டன் (வெஸ்ட் இண்டீஸ்)

2003 உலகக் கோப்பை

 • நைட், நாசர் ஹுசைன், ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
 • ஸ்ரீநாத் (இந்தியா)
 • வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
 • ஆலன் டொனால்டு, கேரி கிறிஸ்டன், ஜாண்டி ரோட்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
 • அரவிந்த் டி சில்வா (இலங்கை)
 • ஹூப்பர் (வெஸ்ட் இண்டீஸ்)
 • ஆன்டி பிளவர், கேம்பெல், விட்டால் (ஜிம்பாப்வே)

2007 உலகக் கோப்பை

 • கிளென் மெக்ராத் (அவுஸ்திரேலியா)
 • மைக்கேல் வாகன் (இங்கிலாந்து)
 • அனில் கும்ப்ளே (இந்தியா)
 • ஸ்டீபன் பிளம்மிங், மெக் மில்லன் (நியூசிலாந்து)
 • இன்சமாம்-உல்-ஹக், அஸார் அகமது (பாகிஸ்தான்)
 • ரஸல் அர்னால்டு (இலங்கை)
 • பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)

2011 உலகக் கோப்பை

 • ஷான் டெய்ட் (அவுஸ்திரேலியா)
 • ஆண்ட்ரூ ஸ்டிராஸ், மேட் பிரியர், பால் காலிங்வுட் (இங்கிலாந்து)
 • ஸ்ரீசாந்த், நெஹ்ரா (இந்தியா)
 • ஸ்காட் ஸ்டைரிஸ் (நியூசிலாந்து)
 • சோயிப் அக்தர் (பாகிஸ்தான்)
 • முத்தையா முரளிதரன் (இலங்கை)
 • சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்)

2015 உலகக் கோப்பை

 • மைக்கேல் கிளார்க், ஜான்சன், ஹேடின் (அவுஸ்திரேலியா)
 • இயான் பெல், ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
 • டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)
 • ஷாகித் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்)
 • மஹிளா ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா (இலங்கை)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...