டோனி இன்னும் எவ்வளவு காலம் விளையாடலாம்? லசித் மலிங்கா கூறுவது இதை தான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணிக்காக டோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டாண்டுகள் விளையாட வேண்டும் என இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் டோனியின் ஆட்டம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து அவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.

இது குறித்து இலங்கை ஜாம்பவான் மலிங்கா கூறுகையில், டோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் வீரராக டோனி இருந்திருக்கிறார்.

அவர் தனது அனுபவத்தையும், நெருக்கடியான நேரத்தில் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்ற அறிவுரையும் இளம் வீரர்களுக்கு அளிக்க வேண்டும்.

இந்தியா எந்த அணியையும் வீழ்த்தும் திறமைமிக்க அணி என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers