இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த பும்ரா!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான திமுத் கருணரத்னே, குசால் பெரேரா ஆகியோரின் விக்கெட்டுகளை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கைப்பற்றினார்.

இதன்மூலம், குறைவான ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பும்ரா தனது 57வது போட்டியில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

இதில் முதலிடத்தில் உள்ள முகமது ஷமி 56வது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

குறைவான போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்

  • முகமது ஷமி - 56 போட்டிகள்
  • ஜஸ்பிரிட் பும்ரா - 57 போட்டிகள்
  • இர்பான் பதான் - 59 போட்டிகள்
  • ஜாகீர் கான் - 65 போட்டிகள்
  • அஜித் அகர்கர் - 67 போட்டிகள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...