தனி ஒரு ஆளாக இலங்கையை தூக்கி நிறுத்திய மேத்யூஸ்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மேத்யூஸ் தன்னுடைய மூன்றாவது சதத்தை பதிவு செய்தார்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 44வது லீக் போட்டியானது லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னிலும், குசல் பெரேரா 18 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ் 3 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் மற்றும் திரிமன்னே நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

வெற்றிகரமாக இருவரும் தங்களுடைய அரைசதத்தை பதிவு செய்திருந்த வேளையில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் திரிமன்னே (53) அவுட்டாகி வெளியேறினார்.

ஆனால் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேத்யூஸ் 128 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் மேத்யூஸ் தன்னுடைய மூன்றாவது சதத்தை பதிவு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவித்தது.

முன்னதாக மேத்யூஸ், 2014 இல் இலங்கை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் 139 * அடித்தார். 2017 இல் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போது இலங்கை 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மற்றொரு போட்டியில் அவர் 111 * அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்