உலககிண்ணம் தொடரில் 5 சதம்: புதிய சாதனை படைத்த ரோகித்சர்மா

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்திய அணியின் ரோகித்சர்மா சதம் அடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 44வது லீக் போட்டியானது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களை குவிந்திருந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்களும், திரிமன்னே 53 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்கார்கள் லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா, இலங்கை அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் ரோகித்சர்மா உலகக்கிண்ணம் தொடரில் தன்னுடைய 5வது சதத்தை பதிவு செய்து புதிய உலகசாதனை படைத்தார். 94 பந்துகளில் 103 ரன்கள் அடித்திருந்த போது ரஜிதா வீசிய பதில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மறுமுனையில் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ராகுல் 118 பந்துகளில் 113 ரன்களை எடுத்து அவுட்டனார். இறுதிவரை களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 34(41), ஹர்டிக் பாண்டியாவுடன் சேர்ந்து 43.3 ஓவர்களில் அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்