அரையிறுதிக்கு முன் அவுஸ்திரேலிய அணிக்கு விழுந்த மரண அடி! முன்னணி வீரர் விலகல்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து, நடுவரிசை வீரர் உஸ்மான் கவாஜா விலகியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இதுவரை 2 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ள அவுஸ்திரேலியா, அரையிறுதிப் போட்டியில் வரும் 11ஆம் திகதி இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.

இந்நிலையில், அந்த அணியின் நடுவரிசை வீரர் உஸ்மான் கவாஜா விலகியுள்ளார். அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மேத்யூ வாட் மாற்று வீரராக களமிறங்க உள்ளார். மேலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தின் போதே பாதியில் வெளியேறிய கவாஜா, பின்னர் மீண்டும் வந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...