நியூசிலாந்துடன் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா... பேட்டிற்கு முத்தம் கொடுத்த டோனியின் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனி தன்னுடைய டிரஸிங் ரூமில் பேட்டிற்கு முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-இந்திய அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் இந்திய அணி நிர்ணயித்த 240 ஓட்டங்களை இந்திய அணி விரட்ட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

சற்று முன் வரை இந்திய அணி 21.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 71 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்படி இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டிருந்த போது, வீரர்களின் அறையில் இருந்த டோனி தன்னுடைய பேட்டை எடுத்து அதற்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதைக் கண்ட கமெரா மேன் அப்படியே புகைப்படம் எடுக்க அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஒரு சில மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அதற்கு ஏற்ற வகையில், விட்றாதடா தம்பி என்ற தனுஷ் நடித்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers