கடைசி கட்டத்தில் திருப்புமுனையான டோனியின் ரன் அவுட்... இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால், நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் நேற்று மழை குறுக்கிட்டதால், இன்று துவங்கிய போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் எடுத்து எடுத்தது.

அதன் பின் ஆடிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா (1), இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஹென்றியின் ஓவரில் லாதமிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவரும் ஒரு ரன்னில் போல்ட் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் தொடக்க வீரர் கே.எல். ராகுலை வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி அவுட்டாக்கினார்.

சிறிது நேரம் களத்தில் நின்ற தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை நீஷம் மிரட்டலாக கேட்ச் செய்து வெளியேற்றினார். எனினும் ரிஷாப் பண்ட்-பாண்ட்யா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 13 ஓவர்கள் மட்டுமே நீடித்தது. பொறுமையுடன் ஆடிக்கொண்டிருந்த ரிஷாப் பண்ட் அவசரப்பட்டு ஷாட் ஒன்றை அடிக்க கிராண்ட்ஹோம் அதனை கேட்ச் பிடித்தார். அவர் 56 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய டோனியுடன், கைகோர்த்த பாண்ட்யா வழக்கமான அதிரடி ஆட்டத்தை கைவிட்டு நிதானமாக ஆடினார். ஆனால், அணியின் ஸ்கோர் 96 ஆக உயர்ந்தபோது சாண்ட்னர் ஓவரில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து பாண்ட்யா(32) ஆட்டமிழந்தார்.

அதன் பின் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த டோனி தன்னுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு புறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா அரைசதம் அடித்து 77 ஓட்டங்களில் வெளியேற, டோனி ஆட்டத்தை கையில் எடுத்தார்.

ஆனால் எதிர்பாரதவிதமாக கப்திலின் துல்லியமான த்ரோவால் டோனி ரன் அவுட்டாக, இந்திய அணி இறுதியாக 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...