டோனி எப்போது ஓய்வு? விராட் கோஹ்லி வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி ஓய்வு குறித்து தங்களிடம் ஏதும் கூறவில்லை என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ஓட்டங்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ஓட்டங்களில் சுருண்டு 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

டோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.

ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போது, டோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் போட்டி முடிந்த பின்னர் விராட் கோஹ்லி இதுகுறித்து கூறுகையில், டோனி அவருடைய ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers