விடைபெற்றார் டோனி..! முடிவுக்கு வந்தது உலகக் கோப்பை கிரிக்கெட் வாழ்க்கை

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர வீரர் டோனியின் உலகக் கோப்பை கிரிக்கெட் வாழ்க்கை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

கடினமான சூழ்நிலைகளில் இருந்து பல வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்தியவர் டோனி. எனினும், நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி மோதலின் போது, ஜடேஜா ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே, 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் டோனி.

அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரருமான டோனி, 72 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்துக்கொண்டார்

2019 உலகக் கோப்பையிலிருந்து இந்திய வெளியேறிய நிலையில், டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நேற்று நியூசிலாந்திற்கு எதிராக அவர் விளையாடி இன்னிங்ஸ், உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய கடைசி போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

38 வயதான டோனி, நேற்றைய போட்டியில் இறுதிவரை வெற்றிக்காக போராடியது, எப்போதும் இந்தியர்களின் நினைவில் வைக்கப்படும், இது அவரது வாழ்க்கையை வரையறுத்துள்ள பண்புகளில் ஒன்றாகும்.

உலகக் கோப்பையின் தொடரில், 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளின் சாதனையை இந்தியா மீண்டும் செய்ய வேண்டுமானால், டோனியை போன்ற வீரரை கண்டறிய வேண்டும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers