கிரிக்கெட்டுக்கு நிறைய கொடுத்துவிட்டீர்கள் டோனி! நெகிழ்ச்சி தெரிவித்த ஆடம் கில்கிறிஸ்ட்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடைசி வரை போராடிய டோனி 50 ஓட்டங்கள் எடுத்து, துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். அந்த தருணம் டோனி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் நொறுக்கியது.

டோனிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை என்பதால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிரியாவிடை அளித்து, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட், தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா.. என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நன்றி. நீங்கள் இந்த விளையாட்டுக்காக (கிரிக்கெட்) நிறைய கொடுத்துவிட்டீர்கள். உங்களது அமைதியையும், சுய நம்பிக்கையையும் எப்போதும் பாராட்டுவேன்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்