இந்தியாவின் தோல்வியை கொண்டாடும் பாகிஸ்தான்... டோனியை வைத்து செய்த மோசமான மீம்ஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் அதை மோசமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டி தான் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாக இருக்கும், அதே சமயம் உணர்ச்சி மிகுந்த போட்டியாகவும் இருந்திருக்கும்.

அந்தளவிற்கு வெற்றியின் அருகில் சென்று இந்திய அணி பரிதாப தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் அபினந்தன் மற்றும் டோனியை சேர்த்து வைத்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் இரண்டு இந்தியர்களும் எல்லைக் கோட்டை தாண்ட முயற்சித்தனர் ஆனால் அது தோல்வியில் போய் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers