கங்குலியை பின்னுக்குத் தள்ளி சச்சின்-டிராவிட்டுக்கு அடுத்த இடத்தை பிடித்த டோனி! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.டோனி, அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

மான்செஸ்டரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதிப்போட்டியில், இந்திய வீரர் டோனி அரை சதம் விளாசினார். இது அவருக்கு 73வது ஒருநாள் அரைசதம் ஆகும்.

இதன்மூலம் அதிக அரைசதம் விளாசிய இந்திய வீரர்களில் கங்குலியை பின்னுக்கு தள்ளினார். முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் 96 அரைசதங்களும், ராகுல் டிராவிட் 82 அரைசதங்களும் அடித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

3வது இடத்தை டோனி பிடித்துள்ளார். கங்குலி 72 அரைசதங்களுடனும், அசாருதீன் 58 அரைசதங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், ஒட்டுமொத்த அரங்கில் 7வது இடத்தை பிடித்துள்ளார் டோனி.

Reuters Photo
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் விளாசியவர்கள்
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 96 அரைசதங்கள்
  • குமார் சங்கக்காரா (இலங்கை) - 93 அரைசதங்கள்
  • ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 86 அரைசதங்கள்
  • ராகுல் டிராவிட் (இந்தியா), இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்) - 83 அரைசதங்கள்
  • ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 82 அரைசதங்கள்
  • மகிளா ஜெயவர்த்தனே (இலங்கை) - 77 அரைசதங்கள்
  • எம்.எஸ். டோனி (இந்தியா) - 73 அரைசதங்கள்
  • சவுரவ் கங்குலி (இந்தியா) - 72 அரைசதங்கள்
  • ஜெயசூர்யா (இலங்கை) - 68 அரைசதங்கள்
  • அரவிந்த டி சில்வா (இலங்கை), முகமது யூசுப் (பாகிஸ்தான்) - 64 அரைசதங்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்