பர்மிங்காமில் தொடங்கியுள்ள 2வது உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று, துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
2019 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பஸ்டான் மைதானத்தில் இன்று நடக்கிறது. பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தற்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்க உள்ளனர்.