டோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக்கூடாது! இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்

Report Print Kabilan in கிரிக்கெட்

டோனியின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் டோனி ரன்-அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், #ThankYouMSD, #ThankYouDhoni என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

ரசிகர்கள் பலர் டோனியை பாராட்டியும், அவரது ஓய்வு குறித்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், டோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் யாரும் தலையிடக் கூடாது. அவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை நாம் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர் முடிவு எடுக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

அத்துடன் இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு தான், அவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் எத்தனை பேருக்கு இவ்வளவு சிறப்பான கிரிக்கெட் பயணம் அமையும்? அத்தகைய சிறப்பை டோனி பெற்றுள்ளார்.

மேலும், நேற்றைய போட்டியில் டோனி களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. எனவே அவரின் ஓய்வு முடிவை அவர் அறிவிக்கும் வரை நாம் இது பற்றி எதுவும் பேசக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்