இந்தியாவைப் போல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலியா! தெறிக்க விடும் இங்கிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

பர்மிங்காமில் நடந்து வரும் 2வது அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை துவங்கியது.

இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் பிஞ்சை(0) அவுட்டாக்கி ஆர்ச்சர் அதிர்ச்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஓவரில் வோக்ஸின் பந்துவீச்சில் டேவிட் வார்னர்(9) ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு அதிரடி வீரர்களை இழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ஓட்டங்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா பறிகொடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்