தாடையை கிழித்த புயல்வேகப்பந்து.. ரத்தம் சொட்ட விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணி வீரர் அலெக்ஸ் கேரி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்து தாடையை கிழித்தது.

பர்மிங்காமில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. துடுப்பாட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், ஸ்டீவ் ஸ்மித்துடன் கைகோர்த்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, அணியை சரிவில் இருந்து மீட்டார். ஆனால், அவர் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்து கேரியின் முகத்தை பலமாக தாக்கியது.

இதில் அவருடைய தலைக்கவசம் கழன்று விழுந்ததுடன், அவரது தாடை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் துடுப்பாட்டம் செய்த அவர், 70 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்