இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தின் பந்து எவ்வுளவுக்கு ஏலம் போனது தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது விளையாடப்பட்ட பந்து அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், வரும் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்நிலையில் லீக் தொடரில் கடந்த 16-ஆம் திகதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி ஓல்ட் டிராபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து, உலககோப்பையின் நினைவுச் சின்னங்களை விற்பனை செய்வதற்கான ஐ.சி.சியின் அதிகாரப்பூர்வ பங்காளியான மெமோராபிலியா பந்தை 2,150 டாலருக்கு (1.5 லட்சம் ரூபாய்) விற்பனை செய்து உள்ளது.

நாணயம் போட பயன்படுத்தப்பட்ட நாணயம் மற்றும் போட்டியின் ஸ்கோர்சீட் ஆகியவை. 99,360 ரூபாய் மற்றும் 75,377-ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்