உலகக்கிண்ணம் தோல்வி எதிரொலி: 20 வயது பந்துவீச்சாளர் கேப்டனாக நியமனம்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

உலகக்கிண்ணம் தொடரில் லீக் சுற்றிலே தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் குல்பதீன் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றது.

லீக் சுற்றுப் போட்டிகளில், ஆடிய 9 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்த ஆப்கன் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பெற்று சோகத்துடன் நாடு திரும்பியது.

இந்தப் படுதோல்வியின் எதிரொலியாக மூன்று மாதங்கள் மட்டுமே கேப்டனாக இருந்த குல்பதின் நபியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக விளையாடிய 56 ஒரு நாள் போட்டிகளில் 36 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்த குல்பதின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்த ரஹ்மத் ஷா பதவியும் பறிக்கப்பட்டு, அனைத்து போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் என்கிற நிலைப்பாட்டில், 20 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்