இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி! இந்த அணி தான் வெல்லும் என அவுஸ்திரேலிய ஜாம்பவான் கணிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர்.

இது குறித்து பேட்டியளித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன்.

உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் கருத்து தெரிவிக்கையில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது கடினம் என்றும், அந்த அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் நினைத்தேன்.

தற்போதும் எனது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது சிறப்பானதாகும். முந்தைய தொடரிலும் இறுதிப்போட்டியில் ஆடி இருக்கும் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு கைகொடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...