உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடிக்கப் போகும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இன்று நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

மே 30ஆம் திகதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில் தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதலால், இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் புதிய சாதனையை படைக்க இருக்கிறார். அவர் இந்த தொடரில் 548 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடங்கும்.

Reuters

இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்த கேப்டன் என்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

எனவே, இன்றைய இறுதிப்போட்டியில் போட்டியில் ஒரு ரன் எடுத்தால் வில்லியம்சன் புதிய சாதனை படைப்பார். மேலும் 127 ஓட்டங்கள் இன்று நடக்கும் போட்டியில் அவர் எடுத்தால், உலகக்கோப்பை தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த சச்சினின் (674) சாதனையை முறியடிப்பார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers