உலகக்கோப்பையில் தெரிவு செய்யாத பிசிசிஐ.. பந்துவீச்சினால் பதிலடி கொடுத்த தமிழக வீரர் அஸ்வின்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், நாட்டிங்காம்ஷர் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியில் தெரிவு செய்யப்படவில்லை. எனினும் இங்கிலாந்தின் கிளப் அணியான நாட்டிங்காம்ஷர் அணிக்காக அஸ்வின் ஒப்பந்தமானார்.

அந்த அணியில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வீரரான ஜேம்ஸ் பேட்டின்சன், அணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அஸ்வின் தெரிவானார்.

இந்நிலையில் நேற்று சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடினார். முதலில் ஆடிய சர்ரே அணி 240 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின், கடந்த 2017ஆம் வருடம் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி தொடரில் வொர்சஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார். அவர் 4 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்படுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் சாஹல் இடம்பிடித்தார். எனவே, தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, பி.சி.சி.ஐ அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers