நான்காவது இடத்துக்கு என்ன திட்டம் வெச்சிருக்கீங்க? கோஹ்லி-ரவிசாஸ்திரியை விளாசும் யுவராஜ் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியில் 4வது இடத்திற்கு யாரை களமிறக்குவது என்ற திட்டம் உலகக்கோப்பை வரை இல்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடுமையாக விளாசியுள்ளார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். அவர் அணியில் விளையாடியபோது 4வது வரிசை வலுவாக இருந்தது. யுவராஜ் சிங், முகமது கைஃப், ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாறி மாறி 4வது வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடியுள்ளனர்.

ஆனால், தற்போதைய இந்திய அணியில் 4வது இடத்திற்கு யாரை களமிறக்குவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. குறிப்பாக, யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற பின் அவரது இடத்தை நிரப்ப யாரையும் அணி நிர்வாகம் கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், யுவராஜ் சிங் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் கூறுகையில், ‘உலகக்கோப்பை வருவதை மனதில் வைத்து சில வீரர்களை 4வது இடத்திற்கு என்று தயார்படுத்தி இருக்க வேண்டும்.

4வது இடத்தில் விளையாடும் வீரர் சில நேரங்களில் தோல்வி அடைந்தால், அவரிடம் நீங்கள் தான் 4ஆம் இடத்தில் உலகக்கோப்பையில் விளையாடப் போகிறீர்கள், கவனமாக விளையாடுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.

அம்பத்தி ராயுடுவை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஒரு அணியில் 4ஆம் இடம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியுமா? நீங்கள் 4வது இடத்தில் ஒரு வீரரை விளையாட செய்யும்போது, அவருக்கு ஆதரவாக செயல்படுவது அவசியம்.

Getty Images

சரியாக விளையாடவில்லை என்று சில போட்டிகளை வைத்து ஒரு வீரரை கைகழுவி விட முடியாது. ராயுடுவுக்கு அடுத்தாற்போல் 4வது இடத்தில் தினேஷ் கார்த்திக்கை இறக்கி கேப்டன் கோஹ்லியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் சோதித்தார்கள். அதிலும் தோல்வி. ரிஷாப் பண்ட்டை இறக்கிவிட்டு பார்த்தார்கள். அவரும் விளையாடினார்.

ஆனால், அவரை உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யவில்லை. உண்மையில் இந்திய அணி நிர்வாகம் 4ஆம் இடம் குறித்து என்ன தான் திட்டம் வைத்திருக்கிறார்கள்?. ரோஹித் ஷர்மாவும், விராட் கோஹ்லியும் ஆட்டமிழந்துவிட்டால், இந்திய அணியை எளிதாக சாய்த்துவிடலாம் என்று அனைத்தும் அணிகளும் எளிதாக அறிந்து வைத்திருந்தார்கள்.

நமக்கு இனி வரும் காலங்களில் 4ஆம் இடத்துக்கு வலுவான வீரர் ஒருவர் தேவை. ஆனால், 4ஆம் இடம் குறித்து என்ன மாதிரியான திட்டத்தை நிர்வாகம் வைத்திருக்கிறது என எனக்கு தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அம்பத்தி ராயுடு திடீரென ஓய்வை அறிவித்தது பார்க்கவும், கேட்கவும் வேதனையாக இருந்ததாகவும், இடம் கிடைக்கவில்லை என்பதற்காக திடீரென ஓய்வு அறிப்பது சரியில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...