இன்று உலகக்கோப்பை இறுதிபோட்டி! வீரர்களை கடன் வாங்கி விளையாடும் இங்கிலாந்து அணி.. எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நிறை ய வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அந்த அணியை எதிர்த்து விளையாடும் வீரர்களை கடன் வாங்கி விளையாடும் இங்கிலாந்து அணி!

அதாவது, இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலமாக கேப்டன் இயான் மார்கன், தொடக்க வீரரான ஜேசன் ராய், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மோயின் அலி, வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் விளங்குகின்றனர். ஆனால் இவர்களுக்குள் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது.

இந்த வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் பிறக்காமல், வெவ்வேறு நாடுகளில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடுகின்றனர்.

இங்கிலாந்து வீரர்கள் பிறந்த நாடு விபரம்:

இயான் மார்கன் (கேப்டன்) - டப்லின், அயர்லாந்து

ஜேசன் ராய் (தொடக்க வீரர்) - டர்பன், தென் ஆப்ரிக்கா

பென் ஸ்டோக்ஸ் (ஆல்ரவுண்டர்) - கிறிஸ்ட் சர்ச், நியூசிலாந்து

ஜோஃப்ரா ஆர்ச்சர் (வேகப்பந்து வீச்சாளர்) - பார்படாஸ், கரீபியன் தீவு

மோயின் அலி (ஆல்ரவுண்டர்) - காஷ்மீரிலிந்து புலம் பெயர்ந்தவர்கள் மோயின் அலியின் தாத்தா

அடில் ரசித்- பிராட்போர்ட் இங்கிலாந்து. (ஆனால் இவர் மோயின் அலியைப் போன்று பாகிஸ்தானை பின்புலனாக கொண்டவர்).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers