உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே இலங்கை வீரர்! யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இதுவரை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள் குறித்து காண்போம்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில், நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணிக்கு முதல் உலகக்கோப்பையாக இருக்கும்.

அதேபோல், இதுவரை இந்த இரண்டு அணிகளில் இருந்து எந்த வீரரும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றதில்லை. எனவே, ஆட்டநாயகன் விருதை இன்று பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்
 • க்ளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்) - 1975ஆம் ஆண்டு
 • விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 1979ஆம் ஆண்டு
 • அமர்நாத் (இந்தியா) - 1983ஆம் ஆண்டு
 • டேவிட் பூன் (அவுஸ்திரேலியா) - 1987ஆம் ஆண்டு
 • வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) - 1992ஆம் ஆண்டு
 • அரவிந்தா டி சில்வா (இலங்கை) - 1996ஆம் ஆண்டு
 • ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா) - 1999ஆம் ஆண்டு
 • ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 2003ஆம் ஆண்டு
 • ஆடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா) - 2007ஆம் ஆண்டு
 • எம்.எஸ்.டோனி (இந்தியா) - 2011ஆம் ஆண்டு
 • ஃபால்க்னர் (அவுஸ்திரேலியா) - 2015ஆம் ஆண்டு

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்