பிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி..! கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை

Report Print Basu in கிரிக்கெட்

2019 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிய நிலையில், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான அணித்தலைவர் பதவியை பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் மற்றும் டி20 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்படலாம் என்றும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லி தொடர்ந்து அணியின் தலைவராக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிய பின்னர் இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐஏஎன்எஸ் அறிக்கையின் படி, எதிர்வரும் பெரிய தொடர்களுக்கு இந்தியா தயாராகி வருவதன் ஒரு பகுதியாக அணித்தலைவர் பதவி பிரித்து வழங்கப்படுகிறதாம்.

பிசிசிஐ நிர்வாகி ஒருவரை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, இந்திய அணியில் வெவ்வேறு குழுக்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா இடையே பிளவு ஏற்பட்டது குறித்தும் பிசிசிஐ கவலை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...