அதிர்ஷ்டத்தால் வெற்றி! நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக ஆடியது.. உண்மையை ஒப்பு கொண்ட இங்கிலாந்து தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பையை நாங்கள் வெல்ல அதிர்ஷ்டமும் காரணம் என இங்கிலாந்து அணி தலைவர் இயான் மோர்கன் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் ஆட்டம் டையில் முடிந்தது.

இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

வெற்றிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன், உலக கோப்பை போட்டி தொடரில் எங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. அரைஇறுதியில் அவர்கள் வலுவான இந்திய அணியை வீழ்த்தி இருந்தனர்.

கோப்பை எங்கள் பக்கம் வந்தது எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இறுதிப்போட்டியில் எங்கள் பக்கம் அதிர்ஷ்டமும் இருந்தது.

தொடக்கத்தில் நாங்கள் வேகமாக விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்டுவது சிரமமாக இருந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பல்வேறு கலாசாரத்தை கொண்டவர்களும், வெவ்வேறு நாடுகளில் வளர்ந்தவர்களும் எங்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அது எங்களுக்கு உதவியாகவே இருந்து வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்