என் இதயம் நொறுங்கிவிட்டது! வேதனை தெரிவித்த நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்ததால், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த 14ஆம் திகதி நடந்தது. ஆட்டம் டை-யில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

ஆனால், அதுவும் டை-யில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐ.சி.சியின் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, ஐ.சி.சியை பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ.சி.சியின் முடிவு குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதயம் உடைந்துவிட்டது. நமது வாழ்க்கையில் மீண்டும் இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தைப் பார்க்க முடியாது. எதிர்பாராத திருப்பங்கள்.. உணர்வுகள்.. திறன்கள்.. மதிப்பு என அனைத்தும். நன்றி நியூசிலாந்து.. நன்றி இங்கிலாந்து’ என தெரிவித்துள்ளார்.

Morne de Klerk/Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்