கோஹ்லிக்கு ஓய்வு! உலகக்கோப்பையில் சொதப்பிய டோனிக்கு அணியில் இடம் உண்டா? வெளியான தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 19-ந் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 3-ந் திகதி நடக்கிறது.

டெஸ்ட் போட்டி தொடர் செப்டம்பர் 3-ந் திகதி முடிவடைகிறது.

இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் வருகிற 19-ந் திகதி நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கின்றனர்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு குறுகிய வடிவிலான (20 ஓவர், ஒருநாள் போட்டி) போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

38 வயதான டோனி அணியில் இடம் பெறுவாரா? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், உலக கோப்பை போட்டியில் டோனி சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு குறித்து டோனி தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்