பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியா? ஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டதால், விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு, ஐ.சி.சியின் மீது பல தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘100 ஓவர் முழுமையாக விளையாடிய பிறகு இரு அணிகளும் சமமான ஓட்டங்கள் பெற்றிருந்த போதும், நீங்கள் தோல்வி அடைந்தால் அது மிக மிக வெற்று உணர்வை அளிக்கும்.

ஆனால், அந்த விதிகள் விளையாட்டின் தொழில்நுட்பங்கள் ஆகும். இந்த விதிகளை எழுதியபோது உலகக்கோப்பை இறுதிப்போட்டி இதுபோன்று சமன் ஆகும் என நினைத்து, அவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள்.

இந்த விதிகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன். போட்டி முடிவுகளை பெற பல வழிமுறைகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்