பிரதமர் முன் இப்படியா நடந்துகொள்வது? இங்கிலாந்து வீரரின் செயலால் சர்ச்சையான வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

பிரித்தானிய பிரதமர் தெரசா மே முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர்கள் வெற்றியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடினர்.

அதன் பின்னர், ரசிகர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிரித்தானிய பிரதமர் தெரசா மேவை நேரில் சந்தித்த வீரர்கள், அவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தெரசா மேவுடன் புகைப்படம் எடுக்கும்போது வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமருக்கு அருகில் நின்றிருந்த அவர், சக வீரரின் தலையில் கையில் வைத்து கிண்டல் செய்து விளையாடுகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ஆர்ச்சர் மைதானத்தில் இருப்பது போன்று விளையாட்டுத்தனமாக இருக்கிறார் என்றும், பிரதமருக்கு அருகில் நிற்கிறோம் என்ற பயம் அவருக்கு இல்லை என்றும் விளாசி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்