டோனியின் இடத்தைப் பிடித்த இளம் வீரர்! வெளியான தகவல்

Report Print Kabilan in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில், இந்திய அணியில் டோனிக்கு பதிலாக ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், மூத்த வீரருமான டோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், டோனி இதுவரை ஓய்வு குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடும். இதற்காக இந்திய அணி வீரர்களை தெரிவு செய்யும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

ஆனால், இந்த தொடருக்கான இந்திய அணியில் டோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், ஒருவேளை டோனி அணியில் இடம்பிடித்தாலும் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷாப் பண்ட் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...