இந்திய அணியில் தமிழக வீரருக்கு பதிலாக இனி இவர் தான்... யார் அந்த அதிர்ஷ்டக்கார வீரர் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் இனி வரும் தொடர்களில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவது கடினம் என்றும் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயருக்கு தான் வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் மூன்று ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் விக்கெட்டுகள் மடமட வென சரிந்து கொண்டிருந்த போது, தினேஷ் கார்த்திக்கை நம்பி களமிறக்கியது.

ஆனால் 26 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் மட்டும் கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம், இனி தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்துக் கொண்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஸ்ரேயஸ் அய்யரை களமிறக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது.

ஸ்ரேய அய்யரும் சமீபகாலமாக உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திக்கிற்கும் இனி உலக்கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்பதன் காரணமாகவே இந்த முடிவு எனவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்