ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. மலிங்காவுக்கு அணியில் இடம்! பலம் வாய்ந்த இலங்கை அணி அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

முதலாவது போட்டி வரும் 26 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 28 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பகலிரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, சேஹான் ஜெயசூரிய, தனஞ்சய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, தசூன் சானக்க, வஹிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, அமில அபோன்சு, லக்ஷான் சந்தகான், லசித் மலிங்கா, நுவான் பிரதீப், கசூன் ராஜித, லஹிரு குமார, திஸர பெரேரா, இசுறு உதான மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...