உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அந்த ஓவர் த்ரோ ஏன் வீசினேன்? தோல்விக்கு பின் முதல் முறையாக மார்டின் கப்டில் விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் பரபரப்பான நேரத்தில் கப்டிலின் த்ரோ அணியின் வெற்றியையே மாற்றியதால், அதைப் பற்றி முதன் முதலாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி அதிர்ஷ்டத்தின் காரணமாகவே வெற்றி பெற்றுவிட்டது எனவும், அன்றைய நாள் நியூசிலாந்து அணிக்கான நாளாக அமையவில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது, 50-வது ஓவரின் போது, பென் ஸ்டோக்ஸ் லெக் திசையில் அடித்துவிட்டு, ஓடுவார், அப்போது அங்கிருந்த கப்தில் மின்னல் வேகத்தில் வந்து பீல்டிங் செய்து பந்தை த்ரோ செய்த போது, பந்தானது ஓட்டம் ஓடி வந்த பென் ஸ்டோக்ஸ் அவுட்டாகமல் இருக்க, பேட்டை நீட்டிய படி டைவ் அடித்த போது, பந்தானது பேட்டில் பட்டதால் பவுண்டரிக்கு சென்றது.

இதனால் நடுவர்கள் ஓட்டம் 2 ஓட்டம், பவுண்டரி என மொத்தம் 6 ஓட்டங்கள் கொடுத்தனர். அதன் பின் போட்டி டை ஆக, சூப்பர் ஓவரிலும் டை ஆக, பவுண்டரியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அந்த த்ரோ குறித்து எதுவும் பேசாமல் இருந்த கப்டில் முதல் முறையாக அதைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.

அதில், இந்த போட்டியில் நாங்கள் நன்றாகவே விளையாடினோம், அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

இதில் குறிப்பாக கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயற்சித்த போது, அவரை எப்படியாவது ரன் அவுட் செய்து விட நினைத்தேன்.

இதன் காரணமாக வெகு வேகமாக ஓடி வந்து பந்தை எடுத்து வீசினேன். அது எதிர்பாராத விதமாக அவரது பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.

இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட்டில் இப்படி நடப்பது சகஜம். ஆனால் அந்த இடத்தில் நடந்தது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதன் பின் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என்று கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...