கிரிக்கெட் வேண்டாம்... இராணுவத்திற்கு செல்கிறேன்: டோனி பிசிசிஐக்கு அனுப்பிய முக்கிய கடிதம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காராரான டோனி எப்போது ஒய்வு பெறுவார் என்ற விவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவர் இப்போது பிசிசிஐக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் டோனியின் ஆட்டம் பழையது போன்று இல்லை, அவர் வீட்டிற்கு கிளம்பலாம், ஓய்வு எடுக்கலாம் என்று முன்னணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அடுத்து வரவிருக்கும் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் டோனி இருக்கமாட்டார் என்ற தகவலும் வெளியானது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் டோனி பிசிசிஐக்கு அனுப்பியுள்ள கடித்ததில், துணை ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அடுத்து இரண்டு மாதங்களுக்கு டோனியின் கிரிக்கெட் விளையாட்டை பார்க்க முடியாது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...