இறுதிப்போட்டியில் வெடித்த ஓவர் த்ரோவ் சர்ச்சை... எம்சிசி விதியில் புதிய திருப்பம்

Report Print Basu in கிரிக்கெட்

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து-நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலகக் கோப்பை 2019 இறுதிப் போட்டியை அடுத்து, மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் எம்சிசி தங்களது ஓவர் த்ரோவ் விதிகளை மறுஆய்வு செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறுதிப்போட்டியின் போது மார்ட்டின் குப்டிலின் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசைதிரும்பி பவுண்டரிக்கு சென்றபின், ஓவர் த்ரோவ் ட விதி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது, இது இறுதிப்போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது.

இதனையடுத்து, எம்சிசி-யின் ஓவர் த்ரோவ் வீதியை மறு பரிசீலினை செய்யும் படி முன்னாள் வீரர்கள், வீரர்கள் உட்பட பலர் வலியுறுத்தினார்கள்.

இதன் விளைவாக, கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலர்களான எம்சிசி, விதிமுறைகளில் மாற்றங்களைக் காண, அடுத்ததாக கூட்டத்தின் போது ஓவர் த்ரோவ் விதியை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.

எம்சிசி யில் ஒரு உணர்வு உள்ளது, அது விளையாட்டின் சட்டங்களை அடுத்ததாக மதிப்பாய்வு செய்யும்போது கருத்தில் கொள்ளும் மதிப்புக்குரியது, இது எம்சிசி துணைக்குழுவின் பொறுப்பாகும் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...