கிரிக்கெட்டை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரிக்க மறுத்த ரஷ்யா

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரிக்க ரஷ்யா மறுத்துள்ளது.

உலகளவில் கால்பந்து போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டி கிரிக்கெட். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பை வென்றதை அடுத்து, அந்நாடு மட்டுமில்லாமல் சுற்றியுள்ள நாட்டுகளிலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று ரஷ்ய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரிக்கெட்டை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரிக்க மறுத்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள வரைவில், மாதிரி விமானம் பறத்தல், செஸ் மற்றும் பெட்டான்க் உள்ளிட்ட சிறிய விளையாட்டுக்களை அங்கீகரித்துள்ளனர்.

இது பெரிய அளவிற்கு அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கீகாரம் பெற போதுமான பிராந்திய கிரிக்கெட் கிளைகள் எங்கள் நாட்டில் இல்லை என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு அதிகாரி, விண்ணப்பப் படிவத்தை தாக்கல் செய்ததில் 'தொழில்நுட்ப சிக்கல்கள்' இருந்ததால் விளையாட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...