விதி மீறல்..! உலகக் கோப்பையின் போது மூத்த இந்திய வீரர் செய்த செயல்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பையின் போது பிசிசிஐயின் குடும்ப விதிகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவர் விசாரணையின் கீழ் வந்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன் மே 3ம் தேதி நடந்த கூட்டத்தில், கேள்விக்குரிய வீரர் தனது மனைவியுடன் 15 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பாகக் கோரியிருந்தார், ஆனால், பிசிசிஐ-யின் குடும்ப விதிகளை குறிப்பிட்டு, அனுமதி அளிக்க மறுத்துள்ளது நிர்வாகிகள் குழு.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் போது ஏழு வார காலம் முழுவதும் வீரரின் மனைவி அவருடன் தங்கியிருந்தார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேள்விக்குரிய வீரர் தனது மனைவியின் கூடுதல் காலம் தங்கியிருக்க, தகுதி வாய்ந்த அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றாரா என்பதுதான். ஆனால், இந்த விடயத்தில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன், அனுமதி அளிக்கவில்லை என அதிகாரி கூறியுள்ளார்..

இந்த விவகாரம் நிர்வாகிகள் குழுவிடம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை, நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம், ஏன் இந்த ஏற்பாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சுனில் சுப்பிரமணியம் என்ன செய்து கொண்டிருந்தார்? அணியின் பயிற்சி அமர்வுகளை கண்காணிப்பது அல்ல அவரது வேலை. ஏற்பாட்டை மேற்பார்வையிட பயிற்சியாளர், கேப்டன் மற்றும் பிற உதவி ஊழியர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் குழு, இந்த விஷயத்தை அறிந்து மேலாளரிடமிருந்து ஒரு அறிக்கையை பெறும் என்று நம்புகிறோம் என்று மற்றொரு மூத்த பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...