இந்த வீரர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் ஜாம்பவான்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மா கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 2வது இடத்தில் உள்ளார். ஆனால், முதலிடத்தில் உள்ள கோஹ்லிக்கும், ரோஹித்துக்கும் இடையே வெறும் 5 புள்ளிகள் தான் வித்தியாசம்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 7 முறை 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா 113 பந்துகளில் 140 விளாசினார்.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘பந்துகளை அவர் அபாரமாக கணித்து விளையாடுகிறார். பந்தை விரைவிலேயே கணித்து விடுவதால் அருமையான ஷாட்டுகளை அடித்து தள்ளுகிறார்.

மற்ற வீரர்களை போல அவர் இல்லை. நிறைய விதமான ஷாட்டுகளை ஆடுகிறார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers