இறுதிப்போட்டியில் இருவருமே சதம் விளாசல்.. மிரட்டிய இலங்கையின் இளம் வீரர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்று U19 உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், கொழும்பு அணியின் கமில் மிஷார மற்றும் அஹன் விக்ரமசிங்கே இருவரும் சதம் விளாசினர்.

U19 Super Provincial ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொழும்பு - தம்புல்லா அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய கொழும்பு அணியில் முகமது ஷமாஸ் 14 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், கமில் மிஷார மற்றும் அஹன் விக்ரமசிங்கே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக விளையாடிய இருவருமே சதமடித்தனர். கமில் மிஷார 114 பந்துகளில் 6 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக கண்டி அணிக்கு எதிராக கமில் மிஷார 152 ஓட்டங்கள் விளாசியிருந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்கள் ஆட்டமிழந்தாலும், விக்ரமசிங்கே கடைசி வரை களத்தில் இருந்தார். இதன்மூலம் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் குவித்தது. விக்ரமசிங்கே 116 பந்துகளில் ஒரு சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 127 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து தம்புல்லா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்