வேகப்பந்து வீச்சாளராக மாறி பவுலிங்கில் அசத்திய தமிழக வீரர் அஸ்வின்.. வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

தமிழ் நாடு பிரீமியர் லீக் போட்டியில் அஸ்வின் வேகப்பந்து வீச்சாளராக மாறி பந்து வீசிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்கிறார்.

இவர் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வித போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மட்டும் இடம்பெற்று வருகிறார்.

அஸ்வின் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைவராக உள்ளார்.

அவர் பேட்டிங்கில் மிக அதிரடியாக விளையாடி வரும் நிலையில், அவர் விசித்திரமான, வித்தியாசமான பவுலிங் செய்து அசத்தி வருகின்றார்.

நேற்று மதுரை அணிக்கு எதிராக திண்டுக்கல் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிகு எதிராக, திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் வித்தியாசமாக பவுலிங் செய்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மதுரை அணிக்கு எதிரான போட்டியின் போதும் அஸ்வின் வேகப்பந்து வீசுவது போல பந்துவீசி அசத்தினார்.

போடியின் கடைசி பந்தில் அஸ்வினின் வித்தியாசமான பந்தால் கிரன் ஆகாஷ் என்ற பேட்ஸ்மேனை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கேயும் அஸ்வின் இதுபோன்று விசித்திர பவுலிங் ஆக்‌ஷன் செய்தால் அவருக்கு பவுலிங் செய்ய தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers