இலங்கை அழகிய நாடு.. இங்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது! வங்கதேச முன்னணி வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் விளையாடுவதற்கு எப்போதும் அழகான நாடு என வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி 26ஆம் திகதி கொழும்புவில் நடக்க உள்ளது.

இதற்கு முன்பாக நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில், வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை லெவன் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இலங்கையில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக வங்கதேச அணியின் மூத்த வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘இலங்கையில் பாதுகாப்பான சூழல் உள்ளது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை கொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இலங்கைக்கு வர எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் யாரும் இங்கு வரக்கூடாது என்று நினைத்ததில்லை.

இலங்கை எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அழகான நாடாக இருந்து வருகிறது. பாதுகாப்பிலும், வசதியிலும் நாங்கள் நன்றாக இருக்கிறோம். இந்த நேரத்தில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் நாங்கள் நினைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்