சர்ச்சையை ஏற்படுத்திய விதிமுறையை மாற்றுகிறதா ஐசிசி?

Report Print Kabilan in கிரிக்கெட்

பவுண்டரிகளின் எண்ணிக்கையை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறையை மாற்றுவது குறித்து, சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட்டது. ஆனால், அதுவும் டை-யில் முடிந்ததால் பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த முறையை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ரசிகர்களும் இந்த முறைக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கமிட்டி, இதுபற்றி கூடி விவாதிக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மேலாளர் ஜியாஃப் அலர்டைஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘போட்டி சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர்படி வெற்றியை தீர்மானிக்கும் முறை 2009ஆம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்டரி முறையில் வழங்கப்பட்ட முடிவு பற்றி புகார் எழுந்தால், அதை மாற்றுவது குறித்து ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers