ரோகித் சர்மாவுடன் மறைமுக மோதல்! விராட் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்காவுக்கு புறப்படும் நிலையில் செய்தியாளர்களை சந்திப்பதை விராட் கோஹ்லி தவிர்த்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-நம் திகதிகளில் நடக்கிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும்.

இதையொட்டி விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்றிரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறது.

வழக்கமாக வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கிளம்புவதற்கு முன்பாக அணித்தலைவரும் பயிற்சியாளரும் செய்தியாளர்களை சந்தித்து தொடர் குறித்து பேட்டி அளிப்பது வழக்கம்.

ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

சமீப காலமாக இந்திய அணி தலைவர் கோஹ்லிக்கும், துணை தலைவர் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ரோகித் சர்மா நிறுத்திக் கொண்டதும் அது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பு நடந்தால் ரோகித் சர்மாவுடனான பனிப்போர் குறித்து தான் சரமாரி கேள்விகள் கேட்கப்படும்.

இதனால் கோஹ்லி கோபமடைய கூட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே அவர் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்