ஆடவர் செய்யாத புதிய சாதனையை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது மகளிர் டி20 போட்டி, நேற்றைய தினம் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

அந்த அணியின் எல்லீஸ் பெர்ரி 39 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை எட்டியுள்ளார். அத்துடன் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் சர்வதேச ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 கிரிக்கெட்டில், முதல் முறையாக 1000 ஓட்டங்களுடன், 100 விக்கெட்டுகளையும் எடுத்தவர் என்ற புதிய சாதனையை எல்லிஸ் பெர்ரி படைத்துள்ளார்.

ஆடவரில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் தற்போது ஆயிரத்து 471 ஓட்டங்களுடன், 88 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்