ரோகித் விஷயத்தில் கோஹ்லி பொய் சொல்கிறாரா? வைரலாகும் புகைப்படத்தால் எழும் கேள்வி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி இந்திய அணியில் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்று கூறினாலும், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று வித தொடர்களில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் கோஹ்லி மற்றும் ரோகித்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், இதனால் இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் கோஹ்லி அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினர்.

இதையடுத்து மேற்கிந்திய தீவுக்கு கிளம்புவதற்கு நேற்று இந்திய அணி தயாராக இருந்த போது, அங்கிருந்த வீரர்களுடன் கோஹ்லி, புகைப்படம் எடுத்துள்ளார். அதில் ரோகித்சர்மா இல்லை, சக வீரர்களே இருந்தனர்.

ரோகித்துடன் பிரச்சனையில்லை என்றால், அவரும் இருந்திரக்கலாம், கோஹ்லி பொய் சொல்கிறாரோ? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்