ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய இளம் வீரர்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ப்ரித்திவ் ஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியபட்டு 8 மாதம் தடை விதித்துள்ளது பிசிசிஐ.

19 வயது இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்திவ் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். துவக்க ஆட்டக்காரரான இவர் இந்திய அணிக்காக ஆடியுள்ள 3 இன்னிங்சில் 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூர் போட்டியான சயத் முஸ்தாக் அலி தொடரின் போது ப்ரித்திவ் ஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த 8 மாதங்கள் எந்த தொடரிலும் கலந்துகொள்ள பிசிசிஐ தடை விதித்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ப்ரித்திவ் ஷா, அடுத்த நவம்பர் 15 ஆம் தேதி வரை நான் எந்த கிரிக்கெட் தொடரிலும் கலந்துகொள்ள முடியாது என்ற பிசிசிஜயின் அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியாய் உள்ளது. உண்மையில் நான் எந்த ஊக்கமருந்தும் சாப்பிடவில்லை.

பிப்பரவரி மாதத்தில் நடைபெற்ற தொடரின் போது நான் மிகுந்த சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டேன். இதனால் இருமலுக்கான காஃப் சிரப் அதிகமாக சாப்பிட்டேன். அதில் இருக்கும் அந்த வேதிப்பொருள் தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.

ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில் நான் இதைப்போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். இது என்னுடைய தவறுதான். பிசிசிஐயின் நடவடிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சம்பவம் நிச்சயம் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்