27 வயதிலேயே ஓய்வு முடிவு.. எனக்கு முன்பே தெரியும்! பயிற்சியாளர் கொடுத்த அதிர்ச்சி

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தனக்கு முன்பே தெரியும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, 27 வயதான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அறிவித்தார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், அமீரின் ஓய்வு முடிவு பாகிஸ்தான் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அமீரின் ஓய்வு முடிவு குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘மற்றவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம். ஆனால், ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அமீர் சிந்தித்து வந்தார்.

AFP

இதுகுறித்து என்னிடமும் பேசி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு, உடல் வலிமை இல்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்.

உடல்நிலையை பொறுத்து எந்த போட்டிகளில் ஆட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது வீரர்களின் தனிப்பட்ட கருத்து. என்னைப் பொறுத்தவரை அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers