ஜாம்பவான் குமார் சங்ககாரா தான் முதலிடம்! டோனிக்கு இரண்டாவது இடம் தான்... எதில் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர்களில் அதிக துடுப்பாட்ட வீரர்களை அவுட்டாக்கியவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் ஆசியாவை சேர்ந்த அணிகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய அணிகளை சேர்ந்த விக்கெட் கீப்பர்களில் அதிக துடுப்பாட்ட வீரர்ககளை அவுட்டாக்கியவர்களின் பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார்.

அவர் 482 பேரை விக்கெட் கீப்பராக இருந்து அவுட்டாக்கியுள்ளார்.

இப்பட்டியலில் இந்தியாவின் டோனி 444 பேரை அவுட்டாக்கி இரண்டாமிடத்தில் உள்ளார்.

பட்டியலில் உள்ள முதல் 6 பேர்,

குமார் சங்ககாரா (482) - இலங்கை

டோனி (444) - இந்தியா

மொய்ன் கான் (287) - பாகிஸ்தான்

முஸ்பிகுர் ரகுமான் (222) - வங்கதேசம்

ரசித் லதீப் (220) - பாகிஸ்தான்

ரமேஷ் கலுவலிதரனா (206) - இலங்கை

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்